மவுஸிற்கு பொருத்தமான தமிழ்ச்சொல் எது?

வலைப்பதிவுகளில் பல இடங்களில் அவதானித்தபோது மவுஸ் என்பதற்கான தமிழ் வடிவத்தில் பல குழப்பங்கள் நிலவிவருவதை அவதானிக்க முடிந்தது. சிலர் எலி என்றும் சிலர் எலிக்குட்டியென்றும் நேரடியாக தமிழ் மாற்றம் செய்து பாவிப்பதை சரியென்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இலங்கையில் இதற்கு மவுஸினது தமிழ்வடிவமாக "சுட்டி" என்பதையும், Clicking இற்கு "சுட்டுதல்" எனவும் சில ஊடகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையே சகபதிவரான இலவசக்கொத்தனாரிடம் தெரிவித்தபோது அவர் சுட்டி என்பதை பலர் URL இற்காகப் பயன்படுத்துவதாகவும் எனவே Clicking என்பதை "சொடுக்குதல்" என்றும் மவுஸை "சொடுக்கி" என்றும் பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தார்.
எனக்கென்னவோ URL இற்கு சுட்டி என்பதைப் பயன்படுத்துவது அதனுடைய உண்மையான தொழிற்பாட்டையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றவில்லை.
URL-Uniform Resource Locator என்பதன் தமிழ் வடிவமாக சுட்டி என்பதைப் பயன்படுத்துவது சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அல்லது மவுஸிற்கு பொருத்தமான வேறு சொற்கள் எதையாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா?
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

எனது கன்னிப் பதிவு.

வணக்கம் நண்பர்களே.!!!
இந்த மாதத்திற்குள் எப்படியும் முதல் பதிவு இடுவதென்று உறுதியான முடிவெடுத்திருந்ததன் காரணமாக, அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இன்று எனது முதல் பதிவை இடுகிறேன். வலைப்பதிவுலகிற்கு நான் கனிஷ்ட பதிவாளன், எனவே சிரேஷ்ட பதிவாளர்கள் பகிடிவதை எதுவும் செய்யாமல் இந்தப் புதிய பதிவாளனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வளவு நாளும் அங்கும் இங்கும் பின்னூட்டம் போட்டும், பழைய பதிவுகளை வாசித்தும் நேரத்தை செலவளித்த நான் இன்று எனது சொந்தப்பதிவுக்கு கால்கோளிடுகின்றேன்.
நன்றி..
படியாதவன்.

என்னப் பற்றி

  • பெயர்: படியாதவன்
  • இடம்: கொழும்பு, Sri Lanka
  • சொல்லுறதுக்கு பெரிசா ஒண்டும் இல்லை..
முழுக்க பாக்க

குப்பைத்தொட்டி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.கொம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உதவி: Blogger
& Blogger Templates