மவுஸிற்கு பொருத்தமான தமிழ்ச்சொல் எது?
வலைப்பதிவுகளில் பல இடங்களில் அவதானித்தபோது மவுஸ் என்பதற்கான தமிழ் வடிவத்தில் பல குழப்பங்கள் நிலவிவருவதை அவதானிக்க முடிந்தது. சிலர் எலி என்றும் சிலர் எலிக்குட்டியென்றும் நேரடியாக தமிழ் மாற்றம் செய்து பாவிப்பதை சரியென்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இலங்கையில் இதற்கு மவுஸினது தமிழ்வடிவமாக "சுட்டி" என்பதையும், Clicking இற்கு "சுட்டுதல்" எனவும் சில ஊடகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையே சகபதிவரான இலவசக்கொத்தனாரிடம் தெரிவித்தபோது அவர் சுட்டி என்பதை பலர் URL இற்காகப் பயன்படுத்துவதாகவும் எனவே Clicking என்பதை "சொடுக்குதல்" என்றும் மவுஸை "சொடுக்கி" என்றும் பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தார்.
எனக்கென்னவோ URL இற்கு சுட்டி என்பதைப் பயன்படுத்துவது அதனுடைய உண்மையான தொழிற்பாட்டையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றவில்லை.
URL-Uniform Resource Locator என்பதன் தமிழ் வடிவமாக சுட்டி என்பதைப் பயன்படுத்துவது சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அல்லது மவுஸிற்கு பொருத்தமான வேறு சொற்கள் எதையாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா?
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

சில விடையங்களை நேரடியா மொழிபெயர்க்க வேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது...
உ+ம் e-mail... இ-அஞ்சல் ஆனால் நாம் பாவிப்பது மின்-அஞ்சல்
எழுதியவர்:
Jay |
February 3, 2007 at 10:23 PM
நேரடியா வேண்டாம், சரியான ஒரு தமிழ் சொல்லை சொல்லுங்கோவனப்பா..
எழுதியவர்:
படியாதவன் |
February 4, 2007 at 2:24 AM
சுட்டி என்பதே என் தெரிவு
எழுதியவர்:
Jay |
February 9, 2007 at 10:01 PM
உங்கள் பதிகவுகள் நன்றாக இருக்கின்றன படியாதவன்.
ஆனால் ஒன்று இந்தப் படிப்புப் படித்துக் கொண்டு (21 வயதிலா!) "படியாதவன்" (ஐயகோ!)என்று சொல்லும் உங்கள் பெருந்தன்மையை மெச்சாமல் இருக்க முடியாது!
என்னை எல்லாம் நான் எப்படிக் கூப்பிட்டுக் கொள்வது என்று தெரியவில்லை!!!
நன்றியும் வாழ்த்துக்களும்
எழுதியவர்:
Anonymous |
March 24, 2007 at 4:34 PM
Mouse என்பதற்கு 'திரைச்சுட்டி' என்றும், URL என்பதற்கு 'வலைப்பக்கச்சுட்டி' என்றும் அழைக்கலாம்.
எழுதியவர்:
Venki |
March 26, 2007 at 6:30 PM