எங்கே செல்லும் இந்தப் பாதை!!? -2

வாசலில செக்கியிட்ட ஐடியக் காட்டிப் போட்டு உள்ளுக்கு போக பக்கத்தால சஞ்ஜீவவும் வாறார்..
சும்மா விசாரிச்சா, பொடியன் இண்டைக்கு சப்மிற் பண்ண வேண்டிய அசைன்மென்ற் செய்யேல்ல,
என்ரய வாங்கிக்கொண்டு லைப்ரரிக்கு போறார்..
இண்டைக்கு லெக்சரை கட் பண்ணிப்போட்டு எழுதிமுடிக்கப்போகுது சிங்கம்..

இப்பிடியான விசயங்களில எல்லாம் நாங்கள் எல்லாரும் நல்ல ஷேப்..
பரஸ்பர உதவிகளுக்கு குறைவிருக்கிறேல்ல..

அவனுக்கு தமிழ் தெரியாது, ஆனா எனக்கு சிங்களம் ஓரளவு தெரியும்..
அதால கதைக்கேக்குள்ள ஆங்கிலத்திலயோ இல்லாட்டி சிங்களத்திலயோ தான் கதைப்பம்..
அவங்களில கனபேருக்கு ஆங்கிலத்தில கதைக்கிறதுதான் விருப்பம்..
அதுக்காக அவங்கள் ஒண்டும் இங்லிஸ் புலிகள் இல்லையில்லை சிங்கங்கள் எண்டு நினைச்சா அது பிழை...

ஒருநாள் இப்பிடித்தான் இங்லிஸ்சில கதைச்சுக்கொண்டிருக்க நான் சொன்னன் "மச்சான் நாங்கள் ஏன்
சிங்களத்தில கதைக்கக் கூடாது? கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நான் சிங்களம் படிக்க இதைவிட்டா வேற சான்ஸ் வராதுதானே"
அவன் சொன்னான்:
"ஒஹோ நல்ல கதை, நீ சிங்களம் படிப்பாய், ஆனா நாங்கள் ஆரிட்ட இங்லிஸ் பேசிப் பழகிறது? "

ஆஹா, இவங்க நம்மளிட்டத்தான் பேசிப் பழகிறாங்களோ..

சரி மச்சான் இனி நாங்கள் இங்லிஸ்லயே கதைப்பம் எண்டு சொல்லியாச்சு, அண்டையில இருந்து எப்பவும் அந்தக் கூட்டத்தோட இங்லிஸ்தான்..

கூட்டமெண்டாத்தான் சொல்லோணும், சிங்களப் பொடியளில ஒவ்வொரு செற் இருக்கும், கொழும்புக்காரர் ஒரு செற், காலி மாத்தறை காரர் இன்னொரு செற் இதில வேற வேற சின்ன சின்ன குறூப்புகளும் இருக்கும், அவயள் தங்கட வசதிக்கேத்தமாதிரி ஒவ்வொருத்தரோட சேருவினம்..
கிட்டத்தட்ட ஒரு பிரதேசவாதம் மாதிரித்தான்..

என்னதான் இருந்தாலும் எங்கட தமிழ் பொடியளிட்ட இப்பிடியான கூத்து ஒண்டும் கிடையாது..
எங்க பாத்தாலும் எல்லாரும் ஒரே கும்பலாத்தான் திரிவம்,
சில கொழும்பு மேட்டுக்குடி எண்டு தங்களை நினச்சுக்கொள்ளுற ஆக்களைத்தவிர மிச்ச எல்லா தமிழ் பொடியளும் ஒண்டுக்குள்ள ஒண்டுதான், அதுக்காக பிரச்சினை ஒண்டும் வர்ரேல்ல எண்டில்ல, ஆனா அது பிரதேச அடிப்படையில் இருக்காது..

கம்பஸ் தொடங்கினதில இருந்து இண்டு வரைக்கும் சிங்களப் பொடியளுக்குள்ள அந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்குது..
rep தெரிவு பண்ணிறதிலையிருந்து புதுசா வாற கனிஷ்ட மாணவர்களுக்கு get together வைக்கிற வரைக்கும் பிரச்சினைதான்..
ஆனா நான் கண்டவரைக்கும் அவங்கள் எல்லாரும் ஒரு விசயத்தில சரியான ஒற்றுமை..
அதென்னன்டா எங்கட இனப்பிரச்சினை..

அவயளோட கதைக்கேக்க அவயளிண்ட மனநிலை எப்பிடி இருந்ததெண்டா,
நான் ஒரு சோலி சுரட்டுக்கு போகாத நல்ல பொடியன்,
நான் புலி இல்லை( அது எதுவரைக்கும் எண்டா பாதுகாப்பமைச்சு ஒண்டும் வேற மாதிரி அறிவிக்காதவரைக்கும் )..
அதால நான் அவையின்ர நல்ல நண்பன்..
தங்கட ஊடகங்களில வாறது எல்லாம் கடைந்தெடுத்த உண்மைகள்..
புலிகளை எதிர்க்கவேண்டும், அழிக்க வேண்டும்..

ஒரு சின்னப் பிரச்சினை எப்ப வந்திச்செண்டா கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருசம் முந்தி,
திருகோணமலையில அஞ்சு பொடியளை சுட்டுப்போட்டாங்கள், அந்த அஞ்சு பேரில ஒருத்தன் எங்கட கம்பஸ் பொடியன்,மற்றவை என்னோட கம்பஸில படிக்கிற இன்னொரு திருகோணமலை நண்பனின்ர நண்பர்கள்..
அந்த வருசம்தான் ரெண்டாம் தரம் A/L எடுத்து சில பேர் வேற வேற கம்பஸுகளுக்கும் எடுபட்டிருந்தாங்கள்..

அடுத்த நாள் கம்பஸுக்கு போகேக்க நான் சரியான கடுப்பில இருந்தன்,
அண்டைக்கெண்டு பாத்து பக்கத்தில வந்து இருந்தான் இன்னொரு சிங்கள நண்பன்..

சும்மா கேட்டன் அவனிட்ட,
"மச்சான் இப்பிடி நடந்தது தெரியுமோடா எண்டு.."
அவன் சொன்ன பதிலில இருந்து அதுவரைக்கும் அரசியல் வேற நட்பு வேற, சிங்கள நண்பர்கள் ரொம்ப நல்லவர்கள் எண்டெல்லாம் நினைச்சிருந்த நான், என்ர எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டன்..

"ஓ அது வடிவாத்தெரியும், அவை அஞ்சு பேருக்கும் நல்லா வேணும், கொண்டுபோன குண்டு வெடிச்சு செத்துப்போச்சினம்..
அவைக்கேன் இந்த தேவையில்லாத வேலை எல்லாம்..."

எனக்கெப்பிடி ரத்தம் கொதிச்சிருக்குமெண்டு நினைச்சுப்பாருங்கோ..
நான் சொன்னன்,
"உங்களுக்கு சுயபுத்தி ஏதும் இருக்கே, உங்கட மீடியாக்கள் சொல்லுறது எல்லாத்தையும் அப்பிடியே நம்புவீங்களோ, அவங்களில ஒருத்தன் எங்கட கம்பஸ் பொடியன் தெரியுமோ.."

அவன் சொன்னான்: "கம்பஸ் பொடியனெண்டா ஏன் புலியா இருக்கேலாது? ஏன் குண்டு வைக்கேலாது? அது சரி, வடக்கில கிளேமோரில செத்த அம்பது ஆமியின்ர கணக்கு எதில சேரும்.?"

கடைசியா ஒரு வசனம் மட்டும்தான் சொன்னன், "ஆனைக்கும் பானைக்கும் சரி அப்பிடித்தானே"

அதுக்கு பதிலே இல்லை.. அதுக்குப் பிறகு நானும் அப்பிடியான விசயங்களை கதைக்கிறேல்ல எண்டு விட்டிட்டன்..
படிப்பு சம்பந்தமா எல்லாம் கதைப்பன், ஆனா வேற ஏதும் அரசியல் கதைகள் தொடங்கினா மெல்ல காய் வெட்டீற்று போயிர்றது..

வேற என்ன, குரங்குக்கு புத்தி சொன்ன சிட்டுக்குருவி ஆயிரக்கூடாதுதானே...

(தொடர்ந்து வரும்)

என்னப் பற்றி

  • பெயர்: படியாதவன்
  • இடம்: கொழும்பு, Sri Lanka
  • சொல்லுறதுக்கு பெரிசா ஒண்டும் இல்லை..
முழுக்க பாக்க

குப்பைத்தொட்டி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.கொம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உதவி: Blogger
& Blogger Templates